கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்துகொண்டு, சுமார் 196 விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.