ஒசூா் மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவரும், திமுக பிரமுகருமான என்.எஸ். மாதேஸ்வரன் நிதியகம் நடத்தி வருகிறார். அவரிடம் கடன் பெற்ற தம்பதி, பணத்தை திருப்பிச் செலுத்திய பிறகும் மேலும் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர், ஞாயிற்றுக்கிழமை என்.எஸ். மாதேஸ்வரனை கைது செய்தார். அவரது மகன் சேரனை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், மாதேஸ்வரனின் நிதியகத்தில் போலீஸார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.