கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பையுடன் சென்ற வேணுகோபால் (68) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பையில் இருந்து 7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு குட்கா கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.