ஒசூர்: திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர வடக்கு பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட ஓசூர் மாநகர திமுக கழக வடக்கு பகுதி செயலாளர் எம். கே. வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள், வடக்கு பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

ஓசூர் எம்.எல்.ஏ. ஓய். பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்காக வாக்குச்சாவடிகள் தோறும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஓசூர் மேயர் எஸ். ஏ. சத்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி