ஓசூர்: சரக்கு வேன் மீது பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பால் பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54) தனியார் நிறுவன ஊழியராவார். இவர் நேற்றுமுன்தினம் இருசக்கர வாகனத்தில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் உள்ள குமுதேப்பள்ளி பகுதியில் சென்றபோது முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குவேன் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி