ஓசூர்: ஏரியில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அக்.30 அன்று வெங்கடாபுரம் பகுதியில் இருந்து பாகலூர் நோக்கி ஏரிக்கரை மேல் வந்த கார் லேசான மழையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக கிரேன் வாகன உதவியுடன் காரை மீட்டனர். காருக்குள் இருந்தவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார் என குறித்த விசாரணை மேற்கொண்டதில் காரில் பயணித்தவர்கள் ஓசூரைச் சேர்ந்த மகேஷ்(30), லிண்டோ (29), சின்ன எலசகிரி பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன்(25) என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி