ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று வாகன தணிக்கையின் போது, கர்நாடகாவில் இருந்து வந்த காரில் இருந்து 528 கர்நாடக மதுபாக்கெட்டுகளை சிப்காட் போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்தவர், நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் நாகராஜ் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்து, மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.