ஓசூரில் ஜிம் பயிற்சியாளர் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (42) ஜிம் பயிற்சியாளர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதை அவருடைய மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் தன்னை தூக்கிட்டுக் கொண்டார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி வெங்கடேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து அட்கோ போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி