ஓசூர் அருகே டூவீலரில் குட்கா கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் தமிழக -கர்நாடக எல்லையில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அத்திப்பள்ளியில் இருந்து டூவீலரில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்ட போது அவர் 3 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெல்ரம்பட்டியை சேர்ந்த வேலு (30) என தெரிய வந்தது. அவரை போலீசார் அவரை கைது செய்துஅவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி