கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஆலூர் ஊராட்சியில் அத்திமுகம் சாலை முதல் தின்னூர் வரை சுமார் 35 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஓய். பிரகாஷ் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.