கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 33வது வார்டில் நேற்று சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ. 8 லட்சத்தில் புதிய நூலகக் கட்டிடம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் சி. ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.