கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓசூரில் சனிக்கிழமை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்துகொண்டு ஹெல்மெட் வழங்கி, வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கிழக்கு மாநகர பகுதி செயலாளர் ராஜி தலைமை தாங்கினார்.