ஓசூர்: பல் மருத்துவர் வீட்டில் நகை திருடிய தந்தை-மகனுக்கு காப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வசந்த் நகரை சேர்ந்தவர் பாத் (35) பல் மருத்துவர் இவர் வீட்டை பூட்டி கிளினிக் சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்த போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. 

இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த கிருஷ்ணன் (50), அவரது மகன் சந்தோஷ் (24) ஆகியோர் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் தந்தை-மகன் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி