கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் அருகே உள்ள பொம்மசந்திராவை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மனைவி முத்தம்மாள் (61) இவர் பெங்களூரு ஓசூர் சாலை -தர்கா முத்து மாரியம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் முத்தம்மாள் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பின் வந்த ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.