100 நாள் வேலைக்கு வழங்க வேண்டிய ரூ.4000 கோடியை வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த வகையில் கொலமங்கலத்தில் நகர செயலாளர் தஸ்தகீர் தலைமையில் இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.