பின்னர் பூஜைகள் முடித்து விட்டு இருச்சக்கர வாகனத்தில் சூளகிரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி இருச்சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீசார், சீனிவாசன் உடலை மீட்டு, உடற்கூஆய்வுக்காக ஒசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.