கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கொத்தமல்லி உள்ளிட்ட கீரைகளை பயிரிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக கொத்தமல்லி வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு கட்டு ரூ. 2 முதல் 3 வரை விற்கப்பட்டது. தற்போது ஒரு கட்டு 10 முதல் 12 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.