கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அட்டகுறிக்கி கிராமத்தில் ரவி (43) மற்றும் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். அப்போது, மறைத்து வைத்திருந்த சாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், இரண்டு பீரோக்களில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.