அரசு மருத்துவமனை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் ரூ. 100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் ஆகியோர் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவமனை செயல்பாட்டை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சத்யா, சார் ஆட்சியர் ஆக்ரித்தி சேத்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி