ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேரோட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள புகழ்பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோயில் மாசித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், ஓசூர் எம். எல். ஏ மற்றும் மாவட்ட எஸ். பி. தங்கதுறை ஆகியோர் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இதில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மரகதாம்பாள் மற்றும் சந்திரசூடேஸ்வரர் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்புடைய செய்தி