உலக சாதனை படைத்த ஓசூர் மாநகராட்சிக்கு சான்றிதழ்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சார்பில் கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று, 315 இடங்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 157 குடிமக்கள் தூய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த உலக சாதனைக்காக எலைட் வேர்ல்ட் ரெக்கார்டு நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் ஷபீர் ஆலம் உள்ளிட்டோருக்கு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் தூதர் அமீத் கே. ஹிங்கரோனி உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி