கிருஷ்ணகிரி: ஏரியில் மண் அள்ளியவர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் நொய்யல் வி.ஏ.ஓ. கவுரம்மாள் மற்றும் அதிகாரிகள் செந்நாயக்கன் ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் அனுமதி இன்றி 50 யூனிட் மண் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் நொய்யலை சேர்ந்த முருகன் என்பவர் ராமநாயக்கன் ஏரியில் மண் எடுக்க அனுமதி பெற்று போலி ஆவணத்தை உருவாக்கி நொய்யல் செந்நாயக்கன் ஏரியில் 50 யூனிட் மண் எடுத்தது தெரிய வந்தது. இது குறித்து கவுரம்மாள் அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி