பாகலூர் போலீசார், கர்நாடகா எல்லைப் பகுதியான சம்பங்கிரி சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்த முயன்றனர். காரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனையிட்டபோது, ரூ. 5 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான 673 கிலோ குட்கா பொருட்களும், ரூ. 4,600 மதிப்பிலான மது பாட்டில்களும் கடத்தப்பட்டது தெரியவந்தது. சேலம் கனகராஜ் தெருவைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரின் பெயரில் இருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.