பாகலூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே நந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (18) என்பவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி