கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி சாலையில் மரகட்டா பகுதியில் இன்று காலை ஒற்றை காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானை வனப்பகுதிக்குள் சென்ற பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.