உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதேஷ் சவுகான் (24) இவர் ஒசூர் ஆலூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவம் அன்று இரவு அவர் அந்த நிறுவனத்தில் இரும்புக் குழாய்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் எதிர்பாராதவிதமாக அவரின் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த பிரதேஷ் சவுகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அட்கோ போலீசார் உடலை மீட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.