கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மூக்கண்டப்பள்ளி எம். ஜி. ஆர். நகரில் சந்திப்பா என்பவரின் வீட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த தினேஷ் (23) செங்கத்தை சேர்ந்த பவானி (22) ஆகிய இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் இரண்டு பேரின் உடலை மீட்டு விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.