கிருஷ்ணகிரி: மண் கடத்தி வந்த லாரி மறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத்திரம் வி.ஏ.ஓ. ரிஷிவந்தியன் மற்றும் அலுவலர்கள் சேலம்-பெங்களூரு சாலையில் தனியார் பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டபோது அதில் 2 யூனிட் மண் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி