கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலையத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 12 வாகனங்கள், அருகில் கொளுத்தப்பட்ட குப்பையில் இருந்து பரவிய தீயால் எரிந்து சேதமடைந்தன. சூளகிரி தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.