குருபரப்பள்ளி அருகே கார் மோதி கூலித்தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே சிக்காரிமேட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில் (48) மே 20 அன்று ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி, காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேஜா (36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி