சூளகிரி அருகே டூவீலர் கவிழ்ந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சிங்கிரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி எல்லப்பா (40) தேன்துர்க்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி