ஒசூரில் கார் கண்ணாடி உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் ஸ்ரீதர், அடகு வைத்த நகையை மீட்க ரூ. 7 லட்சத்துடன் வங்கிக்குச் சென்றார். காசாளர் நகைக்கான அட்டையைக் கேட்டதால், அதை எடுத்துவரச் சென்றபோது, காரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி