ஓசூரில் காஸ் சிலிண்டர் விற்ற முதியவர் உட்பட 2 பேர் கைது

ஓசூர் அருகே தனியார் தீவன ஆலை பின்புறம் சட்டவிரோதமாக வீடு, வணிக காஸ் சிலிண்டர்களில் சிறிய ரக சிலிண்டர்களில் நிரப்புவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் நேற்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், தர்மபுரி மாவட்டம் ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (30) மற்றும் சின்னசாமி (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சிலிண்டர்களை நிரப்பும் இணைப்பு சாதனம், எடை இயந்திரம் மற்றும் 140 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி