மதுரை அருகேயுள்ள சிவம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பூங்காவனத்தம் அம்மன் கோவில் திருவிழா மற்றும் மயானச் கொள்ளை உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. இதில், நடனமாடியபடி மயானத்தை நோக்கிச் சென்ற பெண்கள், வாயில் எலும்புகளை கவ்வியபடி மயானத்தில் சூறையாடிய காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அம்மன் 3 முறை மயானத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அருள் வந்த பூசாரி சாட்டையால் ஆண்களையும் பெண்களையும் அடித்தார். முன்னதாக பெண்கள் தீசட்டி எடுத்தும், அலகு குத்தியும் அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.