தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்-தலைவருக்கு வரவேற்பு.

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு தொடர்பாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி, நேற்று பிணையில் வெளிவந்து சொந்த ஊர் திரும்பினார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மணியேகர் பங்களா பகுதியில் மாவட்ட மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் நாகராணி டி. வி. சேகர் தலைமையில் விவசாயிகள் அவருக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்தும், கேக் வெட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி