போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று (மே 17) மாலை 6 மணி முதல் அகரம், ஆவத்துவாடி, பாரூர், புலியூர், அரசம்பட்டி, மஞ்சமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி