கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அடுத்த ஈச்சங்காடு பகுதியில், சர்க்கரை என்பவர் வளர்த்து வந்த நாய் திடீரென வெறிபிடித்து அப்பகுதி மக்கள் 5 பேரையும், ஒரு மாட்டையும் கடித்து குதறியது. இதில் ஹரீஷ் (18), பச்சையப்பன் (32), தமிழ்செல்வன் (25), தாமோதரன் (65) உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.