போச்சம்பள்ளி வாரச்சந்தையில் துவரை விலை உயர்வு.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நடந்த வாரச்சந்தையில் இன்று துவரையின் வரத்து குறைவால் விலை உயர்ந்தது. கடந்த ஆண்டு துவரை வரத்து அதிகரித்து விலை சரிந்து ரூ. 75-க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருவ நிலை மாற்றத்தால் இன்று வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ. 95 முதல் 105 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் அடுத்த வாரம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் துவரையை வாங்க ஏராளமான பொதுமக்கள் துவரங்கொட்டைகளை வாங்கி சென்றனர்.

தொடர்புடைய செய்தி