கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற த. வெ. க. எம். எல். ஏ. இளையராஜா, மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் நோயாளிகளுக்கு சிகிச்சை முறைகள் மற்றும் அரசுப் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும் நோயாளிகளிடம் சிகிச்சையின் தரம் மற்றும் மருந்துகள் தடையின்றி கிடைக்கிறதா என்று குறித்துக் கேட்டறிந்தார். இதில் தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.