கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பண்ணந்தூர், தாமோதர் அள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த அவரைக்காய் நல்ல செழிப்புடன் வளர்ந்து தற்போது காய்கள் விடத் தொடங்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டு அவரைக்காய் நல்ல முறையில் விளைச்சல் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.