கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து ஓலைபட்டி, சிப்காட் ஊத்தங்கரை மற்றும் கல்லாவிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊத்தங்கரையில் இருந்து காலை 7 மணிக்கு போச்சம்பள்ளி நோக்கி வரும் அரசு நகர பேருந்து மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் செல்லும் நேரத்திற்கு உகந்ததாக இல்லாததால் அதில் யாரும் பயணிப்பதில்லை. அதன் பிறகு வரும் பேருந்துகளில் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஆபாத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.