வருவாய் கிராம ஊழியர் சங்கம் போராட்டம்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், கலமுறை ஊதியம் வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பணியின் போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் குடும்பத்தினருக்கு எவ்வித தடையுமின்றி கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 13-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி