கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் இறைச்சி கடை நடத்தி வரும் வேலுவின் மனைவி லட்சுமி (49) கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்தார். இன்று காலை சந்தூர் முருகன் கோவில் அருகே உள்ள விவசாய கிணற்றில் அவரது உடல் மிதப்பதாக போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து லட்சுமியின் உடலை மீட்டனர். உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், லட்சுமி எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.