போச்சம்பள்ளி: கோடி புதூர் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபுதூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா இன்று (ஜூன் 11) நடைபெற்றது. இதில் 1000 மேற்பட்ட ஆடு, கோழி, பன்றிகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது. மேலும் பலியிடப்பட்ட பன்றி மற்றும் ஆட்டு ரத்தம் கலந்த வாழைப் பழத்தை பிரசாதமாக வீசினார். இதில் ஆண்கள், பெண்கள் மடியேந்தி போட்டிபோட்டுக் கொண்டு வாங்கினர். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து சுமார் 20,000 பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி