போச்சம்பள்ளி: மகா மாரியம்மன் கோவிலில் தங்கத் தாலி திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோணனூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், மர்ம நபர் ஒருவர் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி, தொங்கு விளக்கு மற்றும் பூஜை மணி ஆகியவற்றை திருடிச் சென்றார். இந்த காட்சிகள் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இது குறித்து கோவில் நிர்வாகிகள் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி