கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர் ரவியின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் அ.க. பிரேம்குமார் தலைமையில் தாங்கினர். இதில் அனைத்து ஆசிரியர்களும் ஓவிய ஆசிரியர் ரவியை பாராட்டி சிறப்புரை ஆற்றினர். அனைத்து ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் அவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்