கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புலியூர் பகுதியிலிருந்து அரசம்பட்டி நோக்கி சைக்கிளில் தண்ணீர் எடுத்துச் சென்ற பிரபாகரன் மீது, தர்மபுரியிலிருந்து வந்த கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார், காயமடைந்த பிரபாகரனை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய குடிபோதையில் இருந்த காரில் வந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.