கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் தங்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆண், பெண் என மொத்தம் 13 கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர். கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்களை போலீசார் கைது செய்தனர்.