பனங்காட்டூர்: சாலை ஓரம் உள்ள குப்பைகளால் துர்நாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் உள்ள பனங்காட்டூர் கிராமத்தில், சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தக் குப்பைகளை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி