கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த. வெ. க. சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். இளையராஜா பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் சாப்பாடு வழங்கி அன்னதானம் செய்தார். பட்டினி இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த. வெ. க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.